போலீஸ் வாகனம் மீது ஜீப்பை ஏற்றி கொலை முயற்சி... தென்காசியில் வாலிபர் கைது!
கொல்லம் மாவட்டம் படவூர் கிராமத்தில் நடந்த கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலே இந்தச் சினிமா பாணி விபத்திற்குத் தொடக்கமாக அமைந்துள்ளது.கடந்த ஜனவரி 19-ம் தேதி கொல்லம் படவூர் கிராமக் கோவில் கொடை விழாவில் சில விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அங்கு வந்த தேவன் என்பவர் தனது செல்லப்பிராணி நாயுடன் போட்டிகளில் பங்கேற்க முயன்றுள்ளார்.

கோவில் நிர்வாகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், தேவனைக் கண்டித்து வீட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.போலீசாரின் பேச்சால் ஆத்திரமடைந்த தேவன், கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைப்பேன் என மிரட்டியதுடன் போலீசாருடன் மல்லுக்கட்டினார்.

ஆத்திரம் அடங்காத தேவன், தனது ஜீப்பை எடுத்து வந்து அங்கிருந்த போலீஸ் வாகனத்தின் மீது வேண்டுமென்றே 3 முறை பலமாக மோதினார்.இந்தத் தாக்குதலில் போலீஸ் வாகனத்தில் இருந்த 3 காவலர்கள் படுகாயமடைந்தனர். வாகனமும் பலத்த சேதமடைந்தது. சம்பவம் நடந்த உடன் தேவன் அங்கிருந்து தப்பித்து மாநில எல்லை தாண்டி தமிழகத்திற்குள் புகுந்தார். இந்நிலையில் தென்காசியில் வைத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
