ஜெனீவாவில் மீண்டும் ரஷியா–உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை !

 
ஜெனீவா

அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சியில் ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான அடுத்தகட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது. வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இரு நாள்கள் இந்த பேச்சு நடைபெறும் என இரு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளன. அபுதாபியில் நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என உக்ரைன் தரப்பு முன்பு அதிருப்தி தெரிவித்திருந்தது.

ரஷ்யா - உக்ரைன்

சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போருக்கு ஜூன் மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா இரு நாடுகளுக்கும் அழுத்தம் அளித்து வருகிறது. இந்நிலையில் ஜெனீவா சந்திப்பு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் களத்தில் தினசரி தாக்குதல்கள் தொடர்வது அமைதி முயற்சிக்கு சவாலாக உள்ளது.

ட்ரம்ப் உக்ரைன் புதின்

கிழக்கு உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனிடையே வோலோடிமிர் ஸெலென்ஸ்கி ஜெர்மனியில் உக்ரைன்–ஜெர்மனி இணைந்து அமைத்துள்ள ட்ரோன் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!