கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ஒரு கிராமுக்கு ரூ.7,000/-!
தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை எட்டியுள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானத்திற்கு வழங்கப்படும் கடன் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.6,000 வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதை ரூ.7,000 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்க விலையின் அதிரடியான ஏற்றத்தால் சவரன் ரூ.92,000-ஐ கடந்துள்ளதால், மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த உயர்வு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் செயல்படும் கூட்டுறவு வங்கி, தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் என பல்வேறு நிறுவனங்களில் நகை அடமானக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெருமளவில் இந்த வங்கிகளை நாடி வருவதால், உயர்த்தப்பட்ட நகை கடன் தொகை அவர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மட்டுமே 42 லட்சம் பேருக்கு ரூ.45,000 கோடி மதிப்பிலான நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்க விலை உயர்வின் தாக்கத்தை சமாளிக்க, பொதுமக்களுக்கு நேரடியான நன்மை கிடைக்கும்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வரம்பை உயர்த்தியிருப்பது தற்போது பரவலாக வரவேற்பைப் பெற்றுவருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
