பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு... சுப நிகழ்ச்சியில் சென்ற போது விபரீதம்!
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. கடம்பத்தூர் வெண்மனம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). இவர் அங்குள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்க்கிறார். நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டார்.

அவரது தாயார் கங்கா பாய் வீட்டில் இருந்தார். அவர் வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சிக்குச் சென்றார். இரவு 10:30 மணிக்கு அவர் வீட்டிற்குத் திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த 3 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன. மேலும், ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கார்த்திக் கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
