வாரத் தொடக்க நாளில் நகைப்பிரியர்கள் ஷாக்... மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஜூன் 2ம் தேதி திங்கட்கிழமை கிராமுக்கு ரூ30 உயர்ந்துள்ளது.

வாரத் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதால் முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மே 31ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,920க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று விடுமுறை தினம் ஆதலால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8950க்கும், சவரனுக்கு ரூ240 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.71,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
