பாரீஸ் லூவ்ரே அருங்காட்சியகத்தில் 900 கோடி நகை கொள்ளை... 2 பெண் உட்பட 4 பேர் கைது!

 
பாரீஸ் பாரீஸ்
 பிரான்ஸின் தலைநகர் பாரீசை அதிரவைத்த லூவ்ரே அருங்காட்சியக நகைக் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. பேரரசி மேரி–லூயிஸுக்கு நெப்போலியன் பரிசளித்த வைரம், மரகத நெக்லஸ், மேரி–அமெலி மற்றும் ஹார்டென்ஸ் ஆகிய ராணிகள் பயன்படுத்திய அரிய நகைகள், பேரரசி யூஜெனியின் வைர–முத்து தலைப்பாகை உள்ளிட்ட வரலாற்றுப் பொக்கிஷங்கள் பாதுகாப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அக்டோபர் 19-ம் தேதி கிரேன் உதவியுடன் உள்ளே நுழைந்த மர்ம கொள்ளையர்கள் அருங்காட்சியக பாதுகாப்பைக் கடந்து, மன்னர் நெப்போலியன் கால கிரீடம் உள்பட எட்டு விலைமதிப்புயர்ந்த நகைகளை சுருட்டி சென்றனர். இந்த கொள்ளை உலகத்தையே உலுக்கியது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ. 909 கோடி என மதிப்பிடப்பட்டு, போலீசார் பல்வேறு திசைகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பாரிஸ் ஓட்டல்

இந்த வழக்கில் திருப்பமாக, நேற்று நான்கு பேர் போலீசார் வலையில் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக தகவல் தெரிவிக்கிறது. இவர்களின் வயது 31 முதல் 40 வரை என கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த அக்டோபரில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. கொள்ளை நகைகள் மீட்கப்பட்டதா என போலீஸ் அதிகாரிகள் இதுவரை தகவல் வெளியிடவில்லை; இதனால் இந்த வழக்கு இன்னும் மர்மத்தில் மூழ்கிக்கிடக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!