ஜிப்லி ஆர்வலர்களே உங்க வங்கி கணக்கிலிருந்து பணம் போய்டும்... சைபர் கிரைம் எச்சரிக்கை!

 
ஜிப்லி

சமீபகாலமாக ஜிப்லி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  OpenAI இன் ChatGPT 4o உதவியுடன் தங்களது புகைப்படங்களை ஜிப்லி புகைப்படங்களாக மாற்றி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதாவது வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் ஜிப்லி புகைப்படங்களை பதிவிட்டு  வருகின்றனர்.

ஜிப்லி

இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத ஆப்கள், இணையதளங்கள் மூலம் புகைப்படங்களை ஜிப்லி வரைகலையாக மாற்றும்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை என  போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கீகரிக்கப்படாத ஆப்கள், இணையதளங்கள் மூலம் புகைப்படங்களை வழங்கும்போது தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படலாம். ஜிப்லி வரைகலைக்காக வழங்கப்படும் புகைப்படங்களை விஷமிகள் சைபர் கிரைம்களுக்கு பயன்படுத்த அதிகம் வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. 

ஜிப்லி

ஜிப்லி வரைகலைக்காக புகைப்படங்களை ஏஐ தளங்களுக்கு வழங்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  புகைப்படங்கள் மூலமாக நாம் கொடுக்கும் புகைப்படங்களை வைத்து நமது பயோமெட்ரிக் தகவல்களை இணையதளங்களால் பெற இயலும் எனவும் பயோமெட்ரிக் தகவல்களை வைத்து விஷமிகள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருட முடியும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web