தமிழக பள்ளிகளில் ஜியோ AI இலவச பயிற்சி… மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு!

 
manavar
 

தமிழக பள்ளி மாணவர்களுக்காக ஜியோ நிறுவனம் புதிய AI கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக “ஜியோ AI கிளாஸ்ரூம்” என்ற நான்கு வார இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. ஜியோ மற்றும் கூகுள் ஜெமினி இணைந்து இந்த பயிற்சியை உருவாக்கியுள்ளன. இதில் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள், புதிய தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்து கற்றுக்கொள்ளலாம்.

மேலும் ஜியோ அன்லிமிடெட் 5G வாடிக்கையாளர்களுக்கு ரூ.35,100 மதிப்புள்ள Google Gemini Pro சந்தா 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 2TB கிளவுட் ஸ்டோரேஜ், படம் மற்றும் வீடியோ உருவாக்கும் நவீன AI கருவிகளையும் பயன்படுத்த முடியும். இந்த திட்டம் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை உயர்த்தும் என ஜியோ தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!