அட்ரா சக்க... ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள்... ஒரு முறை சார்ஜ் செய்தால் 100கிமீ வரை பயணிக்கலாம்!

எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில், குறைந்த விலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும், சுற்றுச்சூழல் மாசு இவைகளால் ஏற்படுத்தும் கவலைகளிலிருந்து விடுபட ஒரே வழியாகவும் ஊரகப் பகுதி மக்களின் சிறந்த போக்குவரத்து சாதனமாகவும் இது மாறவிருப்பதாக ஜியோ எலக்டரிக் சைக்கிள் செய்திக் குறிப்பு கூறுகிறது.
48 வாட்ஸ் லித்தியம் பேட்டரியுடன் வரும் இந்த சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 45 கிலோ மீட்டர் வேகம் வரை இது ஓடும் என்பதால், இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக மாறும் என்று கருத்துகள் வந்துள்ளன. முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை மாடல் எலக்ட்ரிக் சைக்கிள் முதல், அடுத்தடுத்த பல திறன்களை கூட்டப்பட்ட சைக்கிள்கள் வரை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அடிப்படை சைக்கிள் விலை ரூ.15000வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சைக்கிள் விற்பனை நிலையங்களிலும், ஆன்லைன் மூலமும் இந்த சைக்கிளுக்கு ரூ.900 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள், 2025ம் ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும்,முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!