நாளை வேலைவாய்ப்பு முகாம்... 500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்!
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை (நவம்பர் 21) வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சிபி தர்ப்பகராஜ் வழங்கிய தகவலில், முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் வேலை தேடும் இளைஞர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய இருக்கின்றன.

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக். உள்ளிட்ட தகுதிகள் கொண்டவர்கள் கலந்து கொள்ளலாம். தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரடியாக ஆஜராக வேண்டும்.வேலை தேடும்வர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் தர்ப்பகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
