வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி.. ரூ.40,000 ஆயிரத்தை ஆட்டைய போட்ட நபர் கைது!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து பல்வேறு துறைகளில் நல்ல சம்பளத்தில் வேலை தருவதாக சிலர் பொய்யான வாக்குறுதிகளை பரப்பி வருவதாக சமீப நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை தடுக்க தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வழிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜன், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், கும்பகோணம் நாச்சியார் கோயிலைச் சேர்ந்த மகேஸ்வரன், சூரக்கோட்டையைச் சேர்ந்த கவுதமன் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் உட்கோட்டம் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி புகார் அளித்தனர்.
அந்த புகாரில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி ஒவ்வொருவரிடமும் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் ஏமாற்றியதாக மேற்கண்ட 4 பேரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் (38) என்பவரை, கள்ளப்பெரம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோகுமார், உதவி ஆய்வாளர் ராஜ்கமல் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!