ஜாலி..!! இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை!!

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது. இப்போதே தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, பதநீர், கம்மங்கூழ் கடைகள் சாலையோரங்களில் இடம்பிடித்து விட்டன. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் குளிர்ச்சியான செய்தி ஒன்றை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.
இன்று மார்ச் 16ம் தேதி வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 19ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மார்ச் 20 ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் . அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க