டூ வீலரில் ஜாலி ரைடு.. மனைவியை ஸ்கெட்ச் போட்டு கொல்ல முயன்ற கான்ஸ்டபிள் கணவன்!

 
கொலை
காதலித்து வந்த பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்வதற்காக, மனைவியை திட்டம் போட்டு கொல்ல பக்கா ப்ளான் செய்து, ஷாப்பிங் போகலாம் என கூறி பைக்கில் அழைத்துச் சென்று, திடீரென பைக்கில் இருந்து குதித்து  ஓடிய கான்ஸ்டபிள் கணவனின் செயல் அதிர வைத்திருக்கிறது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரில், காவல் துறையில் பணிபுரிந்து வரும்  ஹரிஓம் யாதவ் என்ற கான்ஸ்டபிள், தனது காதலிக்காக தனது மனைவியை கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

ஹரிஓம், ஷாப்பிங் செய்வதற்காக  தனது மனைவி க்ஷாமா யாதவை பைக்கில் அழைத்துச் சென்றார்.  குவாலியர் பைபாஸ் அருகே பைக்கை எதிர்த்திசையில் ஓட்டி வந்தார்.  அப்போது முன்னால் வரும் லாரியை கண்டதும், திடீரென பைக்கிலிருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.  

பின்னால் அமர்ந்திருந்த மனைவி விபத்திலிருந்து தப்பினார். இருப்பினும் ஹரிஓம், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்தார். இச்சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் விரைந்து வந்ததும், கான்ஸ்டபிள் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்தக் கொடூர முயற்சியில் படுகாயமடைந்த க்ஷாமா யாதவ் தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  அவரது கண்கள், முகம் மற்றும் உடலின் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.  

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

இச்சம்பவம் குறித்து  கான்ஸ்டபிள் ஹரிஓம் யாதவ், அவரது காதலி பிரியங்கா, மாமியார் நிர்மலா, மாமனார் திவான் சிங் மற்றும் மைத்துனர் வினய் ஆகியோரின் மீது கொலை முயற்சி, வரதட்சணை பிரச்சினை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுதல் போன்ற  பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web