இன்று தமிழகம் வருகிறார் ஜே.பி. நட்டா... தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு சொந்த கட்டிடம் திறப்பு விழா!

 
பாஜக

ஒரு பக்கம் எடப்பாடி  முரண்டு பிடித்து வருகிறார். இரட்டை இலை சின்னம் கிடைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் தோல்வி அவருக்கு பெரிய சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் அதிமுக கோலோச்சி கொண்டிருக்கும் கொங்கு மண்டலத்தில் இது பெரிய தோல்வியாகவே சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்நிலையில், பாஜகவில் இருந்து  முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து விலகி, எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

கூட்டணி தர்மத்தை மீறுகிறார் என்று எடப்பாடி மீது வெறுப்பில் இருக்கும் பாஜக தொண்டர்கள், பல இடங்களில் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் இன்று தமிழகம் வருகிறார் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.

இன்று மார்ச் 10ம் தேதி தமிழகம் வரும் ஜே.பி.நட்டா, தமிழகத்தின் பல பகுதிகளில் பாஜகவுக்கு சொந்த கட்டிடங்களில் கட்சி அலுவலகங்களைத் திறந்து வைக்கிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சொந்த கட்டிடத்தில் கட்சி அலுவலகத்தைத் திறக்கும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. திருச்சியின் மத்திய பகுதியில் நீதிமன்றத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாஜக  அலுவலகத்தை இன்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா திறந்து வைக்கிறார். அதே போல் தமிழகம் முழுவதும் பாஜக வளர்ச்சி சற்றே ஏறுமுகமாக உள்ள நிலையில் இதன் ஒரு அங்கமாக மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த சொந்தமாக அலுவலக கட்டடங்கள் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. 

நட்டா

திருச்சி கோர்ட்பாலம் அருகே மாவட்ட அலுவலக கட்டுமான பணிகள் தொடங்கின. கோடி ரூபாய் செலவில் 16 ஆயிரம் சதுரடி பரப்பளவில் தரைதளத்துடன் கூடிய 3 மாடிகள் கொண்டதாக மாவட்ட தலைமை அலுவலகம் உருவாக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் தங்கும் அறை, கூட்ட அறை, வீடியோ கான்பரன்சிங் அறை என பல்வேறு வசதிகள் அமைந்திருக்கின்றன.

இந்த கட்டிடத்தை இன்று மதியம் 12.01 மணிக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறக்கிறார். திருச்சியில் நடக்கவுள்ள திறப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் உட்படபலர் கலந்து கொள்கிறார்கள்

இதே போல புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாஜக தலைமை அலுவலகத்தை ஒரே நேரத்தில் ஜேபி நட்டா திறந்து வைக்க உள்ளார். இதற்கு முன்பாக திமுக , கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் வரிசையில் திருச்சியில் அலுவலகம் திருக்கிறது பாஜக. அரசியலில் திருப்புமுனை என்றால் திருச்சியை சொல்வார்கள். அதே போல இரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக அரங்கராஜன் குமாரமங்கலம் திருச்சியில் நின்று வென்றார்.

திருச்சி பாஜக

2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக திமுக அதிமுக அல்லாத கூட்டணியை அமைக்கும் என்றும் அதில் தமாகா, புதிய தமிழகம், தேமுதிக, புதியநீதிக்கட்சி, ஐ.ஜே.கே, உட்பட சில கட்சிகளும் அமமுக, சசிகலா அணியும் இணையும் என்கிறார்கள். கட்சி அலுவலகம் சரி...  மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமே?!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web