நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதி 4 பேர் பலி!

 
நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதி 4 பேர் பலி!


தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் இருந்து தஞ்சாவூர்  நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட நீதிபதி கார், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.2 பேர் படுகாயம் அடைந்தனர்.  தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த், வழக்குரைஞர் தனஞ்செய் ராமச்சந்திரன், நீதிமன்ற பணியாளர்கள் வாசு ராமநாதன், ஸ்ரீதர் குமார், உதயசூரியன், பாதுகாப்பு போலீஸ்காரர் நவீன் குமார் ஆகிய 6 பேர் இன்னோவா காரில் திருச்செந்தூரில் இருந்து புதன்கிழமை காலை தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதி 4 பேர் பலி!
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலகரந்தை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இன்னோவா கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதியது.  இதில், காரில் பயணித்த வழக்கறிஞர் தனஞ்செய் ராமச்சந்திரன், போலீஸ்காரர் நவீன் குமார், நீதிமன்ற பணியாளர்கள் ஸ்ரீதர் குமார், வாசு ராமநாதன் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த் மற்றும் நீதிமன்ற நீதிமன்ற பணியாளர் உதயசூரியன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதி 4 பேர் பலி!
போலீசார், விபத்தில் காயமடைந்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த் மற்றும் நீதிமன்ற பணியாளரை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது