ஜூன் 9 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு!

 
விடுமுறை

ஜூன் 9ம் தேதி திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 9ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள், பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. 

திருச்செந்தூர் கந்தசஷ்டி

இது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகிற 14ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது