ஜூனியர் ஆக்கி உலகக்கோப்பை: இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!

 
இந்தியா ஜூனியர் ஆக்கி

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்த 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடரின் (21 வயதுக்கு உட்பட்டோர்) வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், இந்திய அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது.

போட்டி விவரம்: வெண்கலப் பதக்கப் போட்டி: இந்தியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 1–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால், இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற இந்திய அணி அடுத்தடுத்துக் கோல் அடித்து அசத்தியது. முழு நேர ஆட்ட முடிவில், இந்திய அணி 4–2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இதே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் சாம்பியன் கோப்பைக்காக மோதின.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!