#JUST IN: சத்தீஸ்கரில் 9 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு... பெரிய சதி திட்டம் முறியடிப்பு!

 
வெடிகுண்டு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் மிகப்பெரிய சதித்திட்டத்தை முறியடித்த பாதுகாப்புப் படையினர், சக்திவாய்ந்த 9 வெடிகுண்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மாவட்ட ரிசர்வ் படை மற்றும் மத்திய இருப்புப் காவல் படை வீரர்கள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நைமேட் (Naimed) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வனப்பாதையில், பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நக்சலைட்டுகள் நிலத்தடியில் புதைத்து வைத்திருந்த 9 சக்திவாய்ந்த ஐஇடி வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.

கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் ஒவ்வொன்றும் சுமார் 5 முதல் 10 கிலோ எடை கொண்டவை. வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் (BDDS) அந்த இடத்திலேயே அந்த வெடிகுண்டுகளைப் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழித்தனர். பாதுகாப்புப் படையினர் வழக்கமாகப் ரோந்து செல்லும் பாதையைக் குறிவைத்து இந்த வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருந்தன. இந்த வெடிகுண்டுகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஏற்படவிருந்த மிகப்பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகச் சத்தீஸ்கர் எல்லையில் என்கவுண்டர்கள் மற்றும் தேடுதல் வேட்டைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்க நக்சலைட்டுகள் இத்தகைய சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று தண்டேவாடா பகுதியில் நடந்த என்கவுண்டரில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன்று வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகளைக் கண்டறிய ட்ரோன் மூலமாகவும், மோப்ப நாய்கள் உதவியுடனும் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வனப்பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அறிமுகமில்லாத பொருட்கள் அல்லது சந்தேகத்திற்குரிய பள்ளங்கள் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் நக்சலிசத்தை வேரோடு அறுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து 'ஆபரேஷன் காகர்' போன்ற அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!