#JUST IN: இறுதியாகிறது தொகுதி பங்கீடு: காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கில்லை... 28 தொகுதிகளுடன் 1 மாநிலங்களவை இடம்!

 
ராகுல் ஸ்டாலின்

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டில் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூக நிலையை அடைந்து இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்துள்ளன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

ராகுல் செல்வப்பெருந்தகை

இது குறித்து வெளியான தகவல்களின்படி, திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்குவது என்பதும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுவதிலும் இறுதி முடிவு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை விவாதம் நீடித்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தொடர் கோரிக்கை தீர்வு பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது என்றும், ஒரு மாநிலங்களவை சீட் ப்ளஸ் 28 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாகவும் சுமூக முடிவை பேச்சுவார்த்தை எட்டியிருக்கிறது என்கிறார்கள்.

இன்று மாலையே தொகுதி உடன்படிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பங்கு உறுதி செய்யப்பட உள்ளது, தேர்தல் முன் கூட்டணியில் உறுதிப்படுத்தல் நடந்துள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!