#JUST IN:காங்கோவில் பல வருட உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருகிறது... எம்-23 கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதாக அறிவிப்பு!
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல ஆண்டுகளாகத் தொடரும் உள்நாட்டுப் போரில் ஒரு முக்கியத் திருப்பமாக, கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை ஆக்கிரமித்திருந்த 'எம்-23' கிளர்ச்சிக் குழுவினர் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். வைரம், தங்கம் மற்றும் எண்ணெய் வளம் கொழிக்கும் காங்கோ நாட்டில், சர்வதேச நிறுவனங்கள் கனிமங்களை வெட்டியெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறித் தொடங்கப்பட்ட இந்தப் புரட்சிப்படை, நாளடைவில் அந்நாட்டு அரசாங்கத்திற்கே பெரும் சவாலாக மாறியது. ஆரம்பத்தில் மக்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய எம்-23 குழுவினர், பின்னர் வன்முறைப் பாதையில் இறங்கி அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரைத் தாக்கி வந்தனர்.

இந்த எம்-23 கிளர்ச்சிப் படைக்குப் பின்னால் அண்டை நாடான ருவாண்டா இருப்பதாக நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகள் நிலவி வந்தன. ருவாண்டா அரசு இந்தப் படைக்குத் தேவையான நிதி மற்றும் நவீன ஆயுதங்களை வழங்கி வந்ததால், காங்கோவின் வளமான பகுதிகளை அவர்களால் எளிதில் ஆக்கிரமிக்க முடிந்தது. இதனால் காங்கோவில் அமைதி சீர்குலைந்து, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறும் அவலம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவும், குறிப்பாக அமெரிக்கா மேற்கொண்ட தீவிர ராஜதந்திர முயற்சிகள் காரணமாகவும் இந்தப் போரை முடிக்க வழி பிறந்துள்ளது.

அமெரிக்க அரசு சார்பில் ருவாண்டா அதிபருடன் நடத்தப்பட்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, காங்கோவில் முகாமிட்டுள்ள எம்-23 பயங்கரவாதிகளைத் திரும்ப அழைத்து வெளியேற்ற ருவாண்டா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாகப் போரினால் நிலைகுலைந்துள்ள காங்கோ மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. விரைவில் அங்கு அமைதி திரும்புவதோடு, கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படும் என்று சர்வதேச நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
