இந்தியாவில் முதன் முறையாக பௌத்த மதத்தைச் சேர்ந்த பி.ஆர்.கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்!

 
பி.ஆர்.கவாய்
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குப் பதிலாக நீதிபதி கவாய் நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஏப்ரல்  30 ம் தேதி, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி கவாய் நியமனம் தொடர்பான அறிவிப்பை சட்ட அமைச்சகம் வெளியிட்டது. ஏப்ரல் 16ம் தேதி  தலைமை நீதிபதி கன்னா அவரது பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.  அவர் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுவதால், 6 மாதங்களுக்கு மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.   நவம்பர் 23ம் தேதி வரை அவர் இப்பதவியில் நீடிப்பார். இந்தியாவின்   பௌத்த  மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதி இவர் ஆவார்.

அதேபோல், 2-வது தலித் தலைமை நீதிபதியாகவும் உள்ளார். மகாராஷ்டிராவில் 1960-ல் பிறந்த இவர், ஐகோர்ட் நீதிபதி உட்பட   பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 1985 ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 2003 ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.2005 ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது