உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக இன்று சூா்ய காந்த் பதவியேற்பு!

 
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூா்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் அவர்கள் இன்று (நவம்பர் 24, திங்கள்கிழமை) பதவியேற்கிறார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, சூா்ய காந்த் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதியே அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பதவியேற்கும் நீதிபதி சூா்ய காந்த், அடுத்த 15 மாதங்களுக்கு இந்தப் பொறுப்பில் நீடிப்பார். அவர் 2027-ஆம் ஆண்டு, பிப்ரவரி 9-ஆம் தேதி தனது 65 வயது நிறைவில் ஓய்வுபெறவுள்ளார்.

ஹரியாணா மாநிலம், ஹிசாா் மாவட்டத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1962-ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி சூா்ய காந்த், ஒரு சிறு நகரத்தின் வழக்குரைஞராகத் தனது பணியைத் தொடங்கி, இந்தியாவின் உயரிய நீதித்துறைப் பதவியை எட்டியுள்ளது ஒரு மிகப்பெரிய சாதனை. அவர் முதலில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் பணியாற்றினார். பின்னர், 2018 அக்டோபரில் ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, 2019, மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூா்ய காந்த்

உச்சநீதிமன்ற நீதிபதியாக தனது பதவிக்காலத்தில், பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், ஊழல், சுற்றுச்சூழல், பாலின சமத்துவம் தொடர்பாகப் பல்வேறு குறிப்பிடத்தக்க மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் அவர் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக, ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் அவர் அங்கம் வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் குறித்து ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் அரசமைப்பு அமர்வில் நீதிபதி சூா்ய காந்த் இடம்பெற்றிருந்தார். மேலும், பழைமையான தேச துரோகச் சட்டம் மறுஆய்வு செய்யப்படும் வரை, அதன் கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படக் கூடாது என்ற மிக முக்கியமான தீர்ப்பை வழங்கிய அமர்விலும் அவர் இருந்தார். அதேபோல், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் உள்பட அனைத்து வழக்கறிஞர் சங்கங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற பாலின சமத்துவம் குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை அளித்த அமர்விலும் அவர் இடம்பெற்றிருந்தது நீதித்துறையில் அவரின் சமூகப் பார்வையை வெளிப்படுத்துகிறது.

மகனுக்கு 18 வயதாகும் வரை தந்தை தான் பொறுப்பு: உச்சநீதிமன்றம்..!!

மேலும், முப்படையினருக்கான 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உறுதி செய்ததோடு, ஆயுதப் படைகளில் உள்ள பெண் அதிகாரிகளின் பணி நிரந்தரமாக்குவதில் சமத்துவம் கோரும் மனுக்களையும் இவர் தொடர்ந்து விசாரித்து வருகிறார். பெகாசஸ் வழக்கில் 'தேச பாதுகாப்பின் பெயரில் அரசுக்கு எப்போதும் சலுகை அளிக்க முடியாது' என்று அவர் வலியுறுத்தியது நீதித்துறை சுதந்திரத்தின் மீதான அவரது உறுதியைக் காட்டியது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் இடம்பெற்றிருந்த திரு. சூா்ய காந்த், இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பது இந்திய நீதித்துறை வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!