கச்சநத்தம் திருவிழா கொலை வழக்கு... 26 பேரின் ஆயுள் தண்டனை உறுதி... உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
கச்சநத்தம்

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை விவகாரம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதல் கொலைவெறியாக மாறியது. ஆயுதங்களுடன் சென்ற கும்பல் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் சண்முகநாதன், ஆறுமுகம், சத்திரசேகர் உயிரிழந்தனர். காயமடைந்த தனசேகரன் பின்னர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் பழையனூர் போலீசார் 33 பேரை கைது செய்தனர். இருவர் விசாரணை காலத்தில் இறந்தனர். 3 சிறுவர்கள் மற்றும் தலைமறைவான ஒருவரை தவிர்த்து 27 பேருக்கு சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

மேல்முறையீட்டை மதுரை அமர்வு உயர் நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இளையராஜா என்பவரை மட்டும் விடுதலை செய்து, மீதமுள்ள 26 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!