காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைவு? தேர்தல் அரசியலில் புதிய திருப்பம்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி முயற்சி மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த அவர் தனது அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். 2019ஆம் ஆண்டு வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு சுமார் 60 ஆயிரம் வாக்குகள் பெற்றார். பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு 15000 வாக்குகள் பெற்று கவனம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் பெற்றார். ஆனால் அந்த தேர்தலுக்குப் பிறகு சீமான் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2025 பிப்ரவரி மாதத்தில் கட்சியில் இருந்து விலகினார். தற்போது அவரை பல அரசியல் கட்சிகள் அணுகிய நிலையில், அதிமுகவில் இணைய வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு முக்கிய பதவியும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
