தேர்தல் கூட்டணி தொகுதி பேச்சு… நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்து இந்த ஆலோசனை நடைபெறுகிறது. வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள கட்சியின் நிலைப்பாடு குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கமல்ஹாசன் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் இணைவது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யம் தரப்பில் பதினைந்து தொகுதிகள் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறைந்தது ஆறு தொகுதிகளையாவது பெற வேண்டும் என நிர்வாகிகள் கமல்ஹாசனிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
