நாளை கமல்ஹாசன் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பு!

தமிழகத்தில் மும்மொழி கொள்கை குறித்து ஆலோசிக்க நாளை முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாநில உரிமைகளை பறிக்கும் அல்லது மாநில கொள்கைக்கு எதிரான முக்கிய பிரச்சினைகளின் போதும் அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வது தொடர்பாக விவாதிப்பதற்காக மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுத்து, அனைத்து கட்சி கூட்டம் நடத்தி விவாதித்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு பெறுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வரும் தொகுதி மறு வரையறை மற்றும் புதிய கல்வி கொள்கை பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அரசியல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக ஆலோசித்து வரும் நிலையில், மாநிலத்தின் முக்கிய பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. மாநிலத்தின் உரிமைக்காக, அரசியல் கட்சிகள் கௌரவம் பார்க்காமல் இதில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இதில் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக ஏற்கனவே விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் பங்கு பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டை முன் வைக்க இருப்பதாக தவெகவின் பொருளாளர் வெங்கட்ராமன் இதில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளது. கட்சியின் சார்பாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!