பிரபல பாலிவுட் நடிகர் கமல் கான் கைது.... குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு!
மும்பை அந்தேரியில் உள்ள ஒஷிவரா குடியிருப்பு வளாகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தடயவியல் அறிக்கை ஆய்வின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூட்டில் தொடர்புடையவராக பிரபல பாலிவுட் நடிகர் கமல் ரஷித் கான் கைது செய்யப்பட்டுள்ளார். உரிமம் பெற்ற துப்பாக்கி தன்னிடம் இருப்பதாகவும், அதை பரிசோதிப்பதற்காக சுட்டு பார்த்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், துப்பாக்கி சூட்டுக்கு பின்னால் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கமல் கான் பாலிவுட் படங்களில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு, சில படங்களை தயாரித்தவரும் ஆவார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
