கமல் , மன்னி, சாருஹாசனுடன் ... வைரலாகும் புகைப்பட பதிவு!
நடிகர் கமல் ஹாசன், தனது மூத்த அண்ணன் சாருஹாசன்(வயது 95) உடன் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, “2 புன்னகை மன்னர்கள் + மன்னி” என நகைச்சுவையாக பதிவிட்டார். சாருஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
2 புன்னகை மன்னர்கள் + மன்னி pic.twitter.com/jejkimPsLC
— Kamal Haasan (@ikamalhaasan) January 6, 2026
1979-ம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘உதிரிப்பூக்கள்’ படத்தால் நடிகராக அறிமுகமானவர், பின்னர் தளபதி, விக்ரம், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது வயது மூப்பின் காரணமாக ஓய்வெடுத்து வருகிறார்.
இதே நேரத்தில், கமல் ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அதோடு, தனது 234-வது திரைப்பட பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். மேலும், தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளார். இப்படம் 2027 பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
