ஆட்சியைக் கைப்பற்றினார் டிரம்ப்... கமலா ஹாரிஸ் அதிர்ச்சி!

 
ட்ரம்ப்
 

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்று மீண்டும் அமெரிக்க அதிபராக ஆட்சியை கைப்பற்றியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கமலா ஹாரிஸ் - டிரம்ப்

டிரம்ப் தற்போது 270 வாக்காளர் குழு இடங்களை வென்றுள்ளார். கமலா ஹாரிஸ் 214 வாக்காளர் குழு இடங்களைப் வென்றுள்ளார். அமெரிக்க தேர்தலில், கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்பதை ஏழு முக்கிய போர்க்கள மாநிலங்கள் தீர்மானிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு ஆறு மணி நேரத்தில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஏற்கெனவே ஜார்ஜியா மற்றும் வட கரோலினா ஆகிய ஸ்விங் மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார் மற்றும் பென்சில்வேனியா, அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் நெவாடா ஆகிய 5 மாநிலங்களில் முன்னிலையில் உள்ளார்.

கமலா ஹாரிஸ்

அதே சமயம் கமலா ஹாரிஸ் பென்சில்வேனியா மற்றும் மிச்சிகனில் முன்னணி பெற்று சிறப்பாகத் தொடங்கிய போதிலும், ட்ரம்ப் அவரை முந்திக்கொண்டு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

ஸ்விங் மாநிலங்களில் அதிகபட்ச வாக்காளர் குழுக்களை கொண்ட பென்சில்வேனியாவில், 93 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு, அதில் ட்ரம்ப் ஹாரிஸை விட 3 சதவீத புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். அவர் விஸ்கான்சின், நெவாடா மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களிலும் வலுவான முன்னிலை பெற்றுள்ளார்.

இறுதியில் ட்ரம்ப் இந்த ஏழு ஸ்விங் இடங்களையும் வெல்ல முடிந்தால் அது அவருக்கு மாபெரும் வெற்றியாகும். ஏனெனில் ஜனநாயகக் கட்சி கடந்த முறை இந்த இடங்களில் ஆறில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web