அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற சொந்த ஊரில் சிறப்புப் பூஜை!
அமெரிக்க அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாக வேண்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள துளசேந்திரப்புரம் தான் கமலா ஹாரீஸின் சொந்த ஊர். இந்த கிராமத்தில் பிறந்த பி.வி.கோபால் ஐயர் - ராஜம் தம்பதியரின் மகள்கள் சியமளா, சரளா. பின்னர், அரசு வேலை கிடைத்ததையடுத்து கோபால் ஐயர் குடும்பத்துடன் பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு வெளியூர் சென்று விட்டார். தொடர்ந்து அவரது ரத்த சொந்தங்களும் துளசேந்திரபுரத்திலிருந்து பணி நிமித்தமாக வெளியேறி விட்டனர்.
கோபால் ஐயர் சென்னையில் வசித்த போது, மகள் சியமளா அமெரிக்காவில் சட்டம் படிக்க சென்றார். அங்கு உடன் படித்த டொனால்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கமலா, மாயா என இரு பெண் குழந்தைகள் பிறந்தன. இதற்கிடையே டொனால்டை சியமளா விவகாரத்து செய்தார். இதில், கமலா தனது தாயார் சியமளா போல் அமெரிக்காவிற்கு சென்று கல்வி பயின்றதுடன் பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டு அரசியலில் நுழைந்தார்.
தற்போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸ் இன்று நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் உள்ளார். இந்நிலையில் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி, துளசேந்திரபுரத்தில் உள்ள தாய் வழி குடும்ப குலதெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்ரீ சேவக பெருமாள் கோயிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக் அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாக வேண்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. வாஷிங்டன்னில் இருந்து 13 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் குக்கிராமத்தில் கமலா ஹாரிஸுக்காக நடைபெறும் பூஜைகள் ஊடக கவனம் பெற்றுள்ளன.
இது குறித்து கோயிலுக்கு அருகே உள்ள சிறிய கடையின் உரிமையாளரும், அக்கிராமவாசியுமான மணிகண்டன் கூறுகையில், "கமலா ஹாரிஸுக்காக செவ்வாய்க்கிழமை காலை கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் நிச்சயமாக பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இருக்கும்” என்றார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!