காமாட்சி அம்மன் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகாசக்தி பீடங்களில் ஒன்றான இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. விழாவையொட்டி காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடிப் பட்டம் பல்லக்கில் வைத்து ஆலய சுற்றுப்புறத்தில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி எழுந்தருளினார். கொடியேற்றத்தின் போது மலர்கள் தூவப்பட்டன. வாணவேடிக்கைகளும் நடத்தப்பட்டன. காஞ்சிபுரம் சங்கர மடம் இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

மாசித்திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை அம்மன் வெவ்வேறு வாகனங்களில் ராஜ வீதிகளில் வீதியுலா வருகிறார். கொடியேற்றத்துக்கு பின் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் நகர்வலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளித் தேரோட்டம் மார்ச் 1ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 4ஆம் தேதி விஸ்வரூப தரிசனம் மற்றும் விடையாற்றி உற்சவம் நடைபெறவுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
