”ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி ” வாணி ஜெயராம் திடீர் மறைவு!! பிரபலங்கள் இரங்கல்!!

 
வாணி ஜெயராம்

இந்தியாவில் 19 மொழிகளில் 1921 முதல் பிரபல பிண்ணனி பாடகியாக திகழ்ந்து வருபவர்  வாணி ஜெயராம் . இவர் தமது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.   இவருக்கு வயது 79. வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் உயிரிழந்த நிலையில் கிடந்தார். 1921ம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடியவர்.  தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது இயற்பெயர் கலைவாணி.

சமீபத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய அறிமுகப் பாடலே  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இசை ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணத்தில் அவரது சாதனைகள் பல. அவர் பாடாத இந்திய மொழியே இல்லை. மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களையும் தனி ஆல்பங்களிலும் பாடி அசத்தியுள்ளார். அவரின்  பாடல்களில்  தெய்வீகத் தன்மையுடன் இன்னிசை கலந்திருக்கும். 

வாணி ஜெயராம்
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை அகில இந்திய சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர். இதயத்திற்குள் கசிந்துருகும் குரல் இனிமையுடன்  அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரியது.

அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடல்களை பாடி வருகிறார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடுவதிலும் தனித்திறமை பெற்றிருந்தார். இவர் "ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி" என அழைக்கப்படுகிறார்.

rip
காதல், சோகம்,விரக தாபம்,  தாய்மை, சவால் என உணர்ச்சியாக அதனை தனது குரலில் இயல்பாக கொண்டு வந்து ரசிகர்களை கட்டி போட்டவர்  இவருக்கு மாற்று யாருமில்லை எனக் கொண்டாடும் வகையில் அனைத்து பாடல்களுமே மிகமிக இனிமையானவை.  "எல்லா மொழிகளிலும் அவற்றினுடைய த்வனி தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே" - என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web