‘கனா காணும் காலங்கள்' சீரியல் நடிகர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
’கனா காணும் காலங்கள்’ சீரியலில் நடித்ததன் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமான சின்னத்திரை நடிகர் அன்பழகன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.
விஜய் டிவியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலில் வாத்தியாராக நடித்தவர் அன்பழகன். அந்த தொடரில் அன்பழகன் கூறும் ‘எஸ் சார், நோ சார், ஓகே சார்’ என்ற வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதனை தொடர்ந்து ரெட்டை வால் குருவி, தாயுமானவன், மாப்பிள்ளை, காற்றுக்கென்ன வேலி போன்ற பல்வேறு தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் சீதா ராமன், அண்ணா உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கண்டிகை பகுதியைச் சேர்ந்த நடிகர் அன்பழகன், நேற்று இரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அன்பழகனின் மறைவுக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு பல சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் உயிரிழந்த நிலையில், தற்போது அன்பழகனின் மறைவும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
