‘கங்குவா’ ஹிட்டா? ப்ளாஃப்பா? 2000 கோடி வடை... வெளுத்தெடுத்த ப்ளூ சட்டை வார்னிங்!
நாடு முழுவதும் சுமார் 11,000 ஸ்க்ரீன்களில் இன்று நடிகர் சூர்யா - திஷா பதானி நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் ரிலீஸாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.‘கங்குவா’ படம் சுமார் ரூ.2,000 கோடி வரை வசூல் செய்யும் என்றும் படத்தின் வெற்றி விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் உள்ள விநியோகிஸ்தர்களை அழைத்து நடத்தப்படும் என்று தயாரிப்பாளர் பேசியிருந்ததை ரசிகர்கள் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், படத்தின் விஎஃப்எக்ஸ் சரியில்லை, படம் முழுவதும் அசுரத்தனமான உழைப்பைக் கொடுத்து ஒற்றை ஆளாய் சூர்யா தாங்கிப் பிடிக்கிறார். ஆனாலும் அது மட்டுமே வெற்றிக்கு போதாது என்று கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில், ‘கங்குவா’ படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
அதில், "தேவையான அளவுக்கு மட்டும் ப்ரமோஷன் பண்ணிட்டு அமைதியா இருந்தா சுமார் படம் நல்ல வசூலாகும். நல்ல படம் பெரிய ஹிட்டாகும். உதாரணம்: லப்பர் பந்து, அமரன். ஓவர் பில்டப் தந்த பல தமிழ்ப்படங்கள் படுதோல்வி அடைந்தது தான் வரலாறு. உதாரணம்: இந்தியன் 2. கங்குவா நிலை என்னவாகும் என்பது இனி தான் தெரியும்.

இனியாவது ஹாலிவுட் ரேஞ்ச் என்று சொல்வதை நிறுத்துங்கள். ஜூராசிக் பார்க், அவதார், டைட்டானிக், லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற படங்களின் பொருட்செலவு, தொழில்நுட்ப நேர்த்தியை தொடுவது மிகக்கடினம். அதை நாம் தொடும்போது.. அவர்கள் மேலும் பலமடங்கு முன்னேறி இருப்பார்கள். அட்லீஸ்ட்.. அந்த வாயை வச்சிட்டாவது சும்மா இருங்க. Waiting for .. 200, 500,1000,2000 கோடிகள் வடை" எனப் பகிர்ந்துள்ளார்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
