நிதின் கட்கரியுடன் கனிமொழி எம்பி சந்திப்பு... தூத்துக்குடி நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை!

 
கனிமொழி

தூத்துக்குடி  மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கனிமொழி எம்பி மனு அளித்தார்.

டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்.பி., கனிமொழி சந்திப்பு மேற்கொண்டார். அப்போது அவர் அளித்தம மனுவில், "எனது தொகுதியான தூத்துக்குடியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள சாலைகளில் பல்வேறு பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 

கனிமொழி

மதுரை-தூத்துக்குடி பிரிவு NH-38 (பழைய NH-45B) நான்கு வழிச் சாலையில் பல இடங்கள் சேத் அடைந்துள்ளன. மேலும் இது பொதுமக்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. மதுரை-தூத்துக்குடி பிரிவு NH 38 இல், துரைசாமிபுரம், கீழ ஏரல், குருகுச்சாலை ஆகிய இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனை 2015-18 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டாலும், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. 

தூத்துக்குடி

எனவே, பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பல விபத்துகளையும் தவிர்க்கும். எனவே, மதுரை-தூத்துக்குடி NH-38 பிரிவில் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web