தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரத்தை மக்களவையில் விவாதிக்க கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்!
தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மக்களவையில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் மக்களவையில் இந்த தீர்மான நோட்டீஸை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்க மறுத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி இன்றும் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதனால் அவை கூடியதும் தி.மு.க. எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.

திமுகவினரின் இந்த கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருவதால் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் தமிழக எம்.பி.க்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
