58வது பிறந்தநாள்... அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் கனிமொழி மரியாதை!
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாளின் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்துக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்கும் கனிமொழி சென்றார். அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வு திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல் வட்டாரத்திலும் இந்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
