ஒரே விமானத்தில் கனிமொழி, தமிழச்சி, தமிழிசை .... வைரலாகும் புகைப்படம்!
திருப்பூரில் இன்று நடைபெறும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டுக்காக சென்னையிலிருந்து கோவை சென்ற விமானத்தில் அரசியல் ரீதியாக எதிர் துருவங்களில் நிற்கும் பெண்கள் ஒரே நேரத்தில் சந்தித்தனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி சோமு ஆகியோர் பயணம் செய்த அதே விமானத்தில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் மேற்கொண்டார்.
அரசியல் மேடைகளில் கடும் விமர்சனங்களுடன் மோதும் இவர்கள், விமானத்தில் சந்தித்த போது சிரித்துப் பேசி, பரஸ்பர நலம் விசாரித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, பெண்கள் என்ற அடையாளத்தில் ஏற்பட்ட இந்த சந்திப்பு பயணிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த சந்திப்பின் போது அனைவரும் ஒன்றாக குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இந்த புகைப்படத்தை கனிமொழி எம்.பி. தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற வரிகளுடன் பதிவு செய்துள்ளார். திருப்பூரில் நடைபெறும் மகளிரணி மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில், விமானத்தில் நடந்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
