காங்கிரசுடன் மோதல் இல்லை... கனிமொழி உறுதி!

 
கனிமொழி
 

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் கோவி.செழியன், எம்.எம்.அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் எழிலன், தமிழரசி ரவிக்குமார், கான்ஸ்டன்டைன் ரவீந்தரன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், சங்கங்கள் பலரும் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பின்னர் பேசிய கனிமொழி, திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக கூறினார். வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றும் இயக்கம் திமுகதான் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றார். அடுத்த ஆட்சியும் திமுக ஆட்சியாகவே அமையும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் மனுக்கள் தருவதாக தெரிவித்தார். புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும், அதனை முதல்வரே அறிவிப்பார் என்றும் கூறினார்.

கருத்துக் கணிப்புகள் வந்தாலும் வராவிட்டாலும் தேர்தல் களம் திமுக கூட்டணிக்கே சாதகமாக இருப்பதாக கனிமொழி தெரிவித்தார். ராகுல் காந்தியுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும், காங்கிரஸுடன் எந்த மோதலும் இல்லை என்றும் கூறினார். மாணிக்கம் தாகூர் தன்மானம் குறித்து பேசியது பற்றி கேள்விக்கு, தன்மானமும் சுயமரியாதையும் அனைவருக்கும் பொதுவானதே என நாகரிகமாக பதிலளித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!