கன்னியாகுமரி.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு, விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

 
உள்ளூர் விடுமுறை

இன்று மார்ச் 14ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும், 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அரசு  கருவூலங்கள், அத்தியாவசிய பணிகள் தவிர பிற வழக்கமான அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய விடுமுறைக்கு பதிலாக மே மாதம் 13ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அரசு விடுமுறையை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்கள் அடிப்படையிலும் விடுமுறைகள் அளிக்கப்படுவதுண்டு. இந்த விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு  உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோவிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. 

கன்னியாகுமரி

இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மாசி கொடை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று மார்ச் 14ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

14.03.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை (13.05.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web