கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு… சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

 
கன்னியாகுமரி
 

 

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சேவை நடைபெறும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பொங்கல் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை

திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் செல்ல குகன், பொதிகை, விவேகானந்தா என மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சேவை நடைபெறும். நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமாகவும், மாணவர்களுக்கு ரூ.40 சலுகைக் கட்டணமாகவும், சிறப்புக் கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி

சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நேரம் படகு சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17-ம் தேதி காலை 6.45 மணிக்கு டிக்கெட் விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!