கராச்சியில் வணிக வளாக தீ விபத்து… பலி 14 ஆக உயர்வு!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் உள்ள குல் பிளாசா வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு தரை தளத்தில் உள்ள கடைகளில் முதலில் தீ பிடித்தது. தொடர்ந்து கட்டிடத்தின் மூன்று தளங்களுக்கும் தீ வேகமாக பரவியது. மொத்தம் மற்றும் சில்லரை வணிகம் நடைபெறும் இந்த வளாகத்தில் அப்போது பலர் சிக்கினர்.
முதற்கட்டமாக 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தபோது மேலும் 8 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. தீப்பிடித்து கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்குக் காரணம் என போலீசார் தெரிவித்தனர். தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் போராடின. பழைய கட்டிடமான இதில் மொத்தம் 1,200 கடைகள் உள்ளன. இன்னும் 70 பேர் கட்டிடத்தில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
