அசாமில் கர்பி ஆங்லாங் கலவரத்தில் 2 பேர் பலி!

 
அஸ்சாம்
 

அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் பகுதியில் 2-வது நாளாக நேற்று பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் நிலைமை கைமீறியது. ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 58 போலீசார் காயமடைந்தனர். பதற்றம் காரணமாக இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டது.

கர்பி தன்னாட்சி கவுன்சில் எல்லைக்குட்பட்ட அரசு மேய்ச்சல் நிலங்களில் பிஹார், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை வெளியேற்ற வேண்டும் என கர்பி பழங்குடியினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். கோரிக்கைகளை முன்னிறுத்தி பெலங்பி பகுதியில் 9 பேர் கடந்த இரண்டு வாரங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து போலீசார் அவர்களை குவாஹாட்டிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கச் செய்யப்பட்டன. போலீசார் மீது கற்கள், அம்புகள் வீசப்பட்டன. போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியதில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கர்பி ஆங்லாங், மேற்கு கர்பி ஆங்லாங் மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!