கர்நாடக முதல்வராகிறார் சித்தாராமையா!! வீட்டு வாசலில் குவியும் தொண்டர்கள்!!

 
சித்தாராமையா

கர்நாடகா மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதில் முதல்வர் தேர்வு தொடர்பு குறித்து தொடர் சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. சித்தாராமையா,  டிகே சிவகுமார் ஆகியோரிடம் விடிய விடிய பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் சித்தராமையாவை அடுத்த முதல்வராக  காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி அவரது வீட்டு வாசலில் தொண்டர்கள் பேனர்களுடன் குவியத் தொடங்கியுள்ளனர்.

சித்தாராமையா

தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அடுத்த முதல்வர் குறித்து கட்சித்தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் டிகே சிவக்குமாருக்கும் இடையே யார் என்ற போட்டி தொடர்ந்து வருகிறது. சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாரிடம் இது குறித்து  காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி  ஆகியோர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர். கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா இது குறித்து விடுத்த செய்திக்குறிப்பில்  "கர்நாடகா மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான அதிகாரத்தை தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே முதல்வரின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால் ஆகியோ நள்ளிரவிலும் டிகே சிவகுமாரிடம் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.  

சித்தாராமையா

முடிவில் சித்தராமையாவை முதலமைச்சராக அறிவிக்க சிவகுமார் ஒப்புக்கொண்டார். விரைவில் சித்தராமையாவை முதல்வராகவும், சிவகுமாரை துணை முதல்வராகவும்  காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது. சித்தராமையாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் அவரது ஆதரவாளர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் சித்தராமையா வீட்டு வாசலில் குவிந்து வருகின்றனர். மேலும் அவரது வீட்டை சுற்றி பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில்  136 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைமை அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாரை டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்கு  அழைத்தது. மே 15 ம் தேதி சித்தராமையாயும்,  16 ம் தேதி டிகே சிவகுமாரும் டெல்லிக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web