இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது... சோனியா, ராகுல்காந்தி பங்கேற்பு!

 
காங்கிரஸ் காரிய கமிட்டி கார்கே ராகுல்

இன்று காலை கர்நாடகாவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

கடந்த 1924ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மகாத்மா காந்தி தலைமையில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அந்த மாநாடு நடந்து 100 ஆண்டுகள் ஆகிறது. இதை நினைவு கூறும் வகையில் மகாத்மா காந்தி நினைவு நூற்றாண்டு காங்கிரஸ் மாநாடு இன்றும் (டிசம்பர் 26), நாளையும் (டிசம்பர் 27) பெலகாவியில் நடைபெறுகிறது.

காங்கிரஸ்

இதையொட்டி பம்ப சரோவர் பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் காாிய கமிட்டி உறுப்பினர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள், சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர்கள், மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள், அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கிறார்கள். இதைத்தொடர்ந்து இன்று மதியம் 3 மணிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கிறார்.

காங்கிரஸ்

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் மற்றும் மாநாட்டில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web