கர்நாடகா தேர்தல்... பதை பதைக்க வைக்கும் பாஜகவின் அஸ்திரம்... கலக்கத்தில் காங்கிரஸ்!

 
மோடி அண்ணாமலை

கோடை காலம் ஆரம்பித்து விட்டது. ஆனால் கத்தரி வெயில் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் கத்திரி வெய்யிலை விட அனல் பறக்க துவங்கி விட்டது கர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரம். கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடக்கிறது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக மேலிட தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். தென் மாநிலங்களில் பாஜக முதலில் கால் பதித்த மாநிலம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு அதை விட முக்கியத்துவம் அளித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, கட்சி தலைவர் ஜேபி நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா, தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முதல்வர் பசவராஜ் பொம்மை பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, என பட்டியல் நீண்ண்........டு கொண்டே போகிறது.

கர்நாடக தேர்தல்

தேசிய தலைவர்களான நளின் குமார் கட்டீல், சதானந்த கவுடா, ஈஸ்வரப்பா, கோவிந்த் கர்ஜோல், அசோக், மத்திய அமைச்சர்கள் நிர்மலா நாராயணசுவாமி, சீதாராமன், ஸ்மிருதி இரானி, தர்மேந்திர பிர தான், மன்சுக் மாண்ட அனுராதா வியா, ஷோபா கரந்த்லாஜே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அருண் சிங், அருணா, சிடி ரவி,உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பிரபாகர் கோரே, நாராய ணசுவாமி, பகவந்த் குபா, அரவிந்த லிம்பாவலி, ஸ்ரீராமுலு, கோட்டா ஸ்ரீனிவாச பூஜாரி, பசன கவுடா பாட்டீல் எட்னல், உமேஷ் ஜாதவ், சாலவாதி என். ரவிக்குமார், ராஜேஷ், ஜக்கேஷ், ஸ்ருதி, தாரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட நாற்பது நட்சத்திரப்பேச்சாளர்கள் என்று சொல்லப்பட்டாலும் கர்நாடகா பாஜகவிற்கு கை கூடுமா இல்லை கைக்கு கை நழுவுமா என பட்டிதொட்டி முழுக்க பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

இந்நிலையில் அதிமுகவும் புலிகேசி தொகுதியில் அக்கட்சியின் அம்மாநிலத் தலைவரை களம் இறக்க தயாராகிவிட்டது. நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்தமுறை பாஜகவை கடுமையாக சாடி தேர்தலில் போட்டியிட்டார் ஆனால் இம்முறை கப்சிப்பாகி விட்டார். தற்பொழுதைய நிலவரப்படி தேர்தல் முடிவுகள் என்னவாகும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web