கருப்பசாமி கோவில் கொடைவிழா!! கோலாகலக் கொண்டாட்டம்!!

 
கருப்பசாமி கோவில் கொடை விழா

தமிழகத்தில் தென்பகுதிகளில் பெரும்பாலான கோவில்களில் சித்திரை , வைகாசி மாதங்களில் தான் கொடை விழாக்கள், திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி அருகேயுள்ள மானாடு விஸ்வகுல கருப்பசாமி சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கருப்பசாமி கோவில் கொடை விழா

இதற்காக முந்தைய தினமே மாலை 5மணிக்கு திருச்செந்துரிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து மானாடு விஸ்வகுலஅக்கசாலை விநாயகர் கோவிலில் தீபாராதனை நடத்தப்பட்டது. இரவு 10 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்ப கலசம் ஏற்றி தீபாராதனை நடந்தது. ஏப்ரல் 21ம் தேதி அதிகாலை 5மணியளவில் சுவாமி ஊர்சுற்றி வருதல், பிற்பகல்  12மணி சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6மணி பக்தர்கள் பொங்கலிடுதல், இரவு 12மணிக்கு கணியான் ஆட்டம், வில்லிசை, அலங்கார தீபாராதனையும் நடந்தது.

கருப்பசாமி கோவில் கொடை விழா

அதிகாலை 2மணியளவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு படைப்பும் நடைபெற்றது. இந்த  தீபாரதனைக்குப்பிறகு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web