ஜனநாயகன் ரிலீசில் சிக்கல்... கருப்பு வெளியீட்டில் தாமதம்?!

 
கருப்பு

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியத்திடமிருந்து எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக சென்சார் சான்றிதழ் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பொங்கல் பண்டிகை வெளியீட்டிலிருந்து படம் அதிகாரப்பூர்வமாக விலகியது. இந்த திடீர் தள்ளிவைப்பு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகன்

தற்போதைய சூழலில், ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த காலகட்டத்தில் வெளியீடுக்கு திட்டமிடப்பட்டுள்ள மற்ற படங்கள் பாதிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. பெரிய நட்சத்திரப் படம் என்பதால், திரையரங்குகள் மற்றும் வசூல் கணக்குகள் மாறும் சூழல் உருவாகியுள்ளது.

அதிகமாக நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல், நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி’ படம் ஜனவரி 30-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், அதன் தேதியும் தள்ளிப்போகலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜய் படத்தின் அடுத்த அறிவிப்பை திரையுலகம் கவனத்துடன் எதிர்பார்த்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!