கரூர் துயரம் … அரசியல் கூட்டங்களுக்கு விதிமுறைகள் தேவை ... உச்சநீதிமன்றம் வேதனை!
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று வேதனை தெரிவித்துள்ளது. அந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

அரசியல் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் தேவை என நீதிமன்றம் வலியுறுத்தியது. கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள், அவசரகால நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும் என்றார். இவ்வழக்கு கரூர் சம்பவத்துடன் நேரடியாக தொடர்பில்லை என்றும் நீதிபதி விளக்கம் அளித்தார்.

கரூர் போன்ற துயரங்கள் இனி மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக விதிமுறைகள் அவசியம் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் பொதுமக்களும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
