நாளை வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 தொடக்கம்!

 
காசி தமிழ் சங்கமம்


 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள  வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஆன்மிகம், கலாச்சார ரீதியாகப் நெடுங்காலமாக தொடர்பு இருந்து வருகிறது.  அதனை வலுப்படுத்தும் வகையில்  பிரதமர் மோடி  2022ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிழ்ச்சியை தொடங்கினார். இதன் 2வது சங்கமம் 2023 டிசம்பரில் நடைபெற்றது. இந்த 2 சங்கமங்களுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர்  அழைத்துச் செல்லப்பட்டனர்.

காசி


இதன் தொடர்ச்சியாக காசி தமிழ்ச் சங்கமம் 3.0  நாளை வாரணாசியில் தொடங்குகிறது. பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டு இருப்பதால்  நாளை மாலை நடைபெறும் கேடிஎஸ் 3.0 தொடக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை அமைச்சர் முருகன் மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்  கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சி வரும் தொடர்ந்து 10 நாட்கள்  அதாவது பிப்ரவரி 25 வரை  நடைபெறுகிறது.
இதில் தமிழகம் மற்றும் தேசிய அளவில் பல முக்கிய பிரிவினர் கலந்து கொண்டு அன்றாடம் உரை நிகழ்த்த உள்ளனர். இந்த பட்டியலில், பாரத் கியான் அமைப்பின் நிறுவனத் தம்பதிகள் டாக்டர்.டி.கே.ஹரி மற்றும் டாக்டர் பிரேமா ஹரி, காசி கும்பாபிஷேகம் எனும் நூலை வெளியிட்ட நகரத்தார் சமூகத் தலைவர்களில் ஒருவரான சுப்பு சுந்தரம் இடம் பெற்றுள்ளனர்.

காசி

இவர்களுடன், வாரணாசியின் சங்கரா கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.ரமணி, வேத விற்பன்னர் வேலுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி, தமிழகத்தின் பல சிவன் கோயில்களை புனரைமைத்து பராமரித்து வரும் கற்பகம் கல்வி அறக்கட்டளையின் ஆர்.வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.  பிப்ரவரி 21ம் தேதி  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  கடந்த 2 காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்காற்றியவர். 22ம் தேதி கோவிலூர் மடத்தின் மடாதிபதி நாராயண ஞானதேசிக சுவாமி கலந்து கொள்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், 23ம் தேதி கலந்து கொள்கிறார்.  பிப்ரவரி 24ம் தேதி பிரபல ஜோதிடரும் கர்நாடக சங்கீத வித்வானுமான ஹரிகேச நல்லூர் வெங்கட்ராமன் கலந்து கொள்கிறார்.  பிப்ரவரி 25ம் தேதி நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கங்கை கரைகளில் ஒன்றான நமோ காட்டில் ஒரு அரங்கு அமைத்து கேடிஎஸ் 3.0 நடைபெற உள்ளது. சில நிகழ்ச்சிகள் வாரணாசியில் உள்ள பழமை வாய்ந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ரயில்கள் மூலம் இதற்கு வருகை தருபவர்களை மகா கும்பமேளாவில் ஒரு இரவு தங்க வைக்கவும், அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து சுமார் 2,400 பேர், மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் 200 பேரும் இதில் கலந்து கொள்கின்றனர். காசி தமிழ்ச் சங்கமம் 3.0-ன் மூலக்கருத்தாக மகரிஷி அகஸ்திய முனி வைக்கப்பட்டுள்ளது. அகத்தியர் என்றழைக்கப்படும் இவர், காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையில் சிறந்த இணைப்பாகக் கருதப்படுகிறார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?